20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்..!!

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக, எதிர்வரும் 21 ஆம் திகதி கூடி ஐக்கிய மக்கள்…

மேலும்

சீ.வி. விக்னேஸ்வரனிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு..!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 30  ஆம் திகதி…

மேலும்

இனவாதிகளின் முகத்தில் அறைந்தாற் போல்… நாடாளுமன்றத்தில் மாற்று அணியின் உரைகள்!

சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோரின் நாடாளுமன்ற உரைகள் சிங்கள இனவாதிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக விக்னேஸ்வரனின் தோற்றத்துக்கு அந்த இடத்தில் ஓர் பண்பாட்டு பொலிவும் அரசியல் அழுத்தமும் இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் அவருடைய திருநீறையும் சந்தனப் பொட்டையும் விமர்சிப்பதுண்டு. அந்த மதச் சின்னங்கள் அவரை கிறிஸ்தவ வாக்காளர்களிடம் இருந்து விலக்கி வைக்கின்றன என்று…

மேலும்

நியமனங்களை மாற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கு இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் ‘சுபீட்சத்தின் நோக்கு’…

மேலும்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா பயணமாகிறார் ராஜ்நாத்சிங்..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (புதன்கிழமை) ரஷ்யா செல்லவுள்ளார். மூன்று நாள் பயணமாக ரஷ்யா செல்லும் அவர்,  ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்ஜி சோய்ஜி மற்றும் முக்கிய இராணுவ அதிகாரிகளையும்  சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன்  இராணுவ தளவாட கொள்முதல் தொடா்பான பேச்சுவாா்த்தையும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

மேலும்

நண்பனை இழந்ததால் நிறைய இழந்துவிட்டேன்- பிரதமர் மோடி கவலை..!!

நண்பனான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை இழந்தமையினால் நிறைய இழந்து விட்டேன் என பிரதமர்  நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.…

மேலும்

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவருக்கு கொரோனோ பரிசோதனை..!!

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவர், நீதிமன்றத்தின் அனுமதியுடன், கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடற்படையினரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்ட அவர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அச்சுவேலி- வளலாயைச்  சேர்ந்த செல்வரத்தினம் செல்வதாஸ் (வயது -35) என்பவரே…

மேலும்

இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்கர்கள் போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன்பாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ், தென்சீன கடல் எல்லை, வர்த்தகப்போர் என பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால், சீன அரசை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கமைய இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்கர்கள்…

மேலும்

இதுவரையில் 110 பேர் உயிரிழப்பு..!!

அஸாமில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் இந்த அனர்த்தம் காரணமாக 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அஸாமில் அண்மையில் பெய்த மழையால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.…

மேலும்