ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மீது ஐக்கிய தேசியக்கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை..!!

சஜித் பிரேமதாச தiமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மீது ஐக்கிய தேசியக்கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கமுடியாது என்று கட்சியின் வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சியின் வேட்பாளர் சுஜீவ சேனசிங்க இது தொடர்பில் கருத்தை வெளியிட்;டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அவர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படும் என்று அந்;த…

மேலும்

குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் சிலர் ‘குண்டுதாரிகள்’..!!

குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோன தொற்றுக்கு உள்ளானமையைக்கொண்டு அவர்களை சிலர் ‘குண்டுதாரிகள்’என்று குறிப்பிடப்பட்டமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கண்டித்துள்ளார். குவைத்தின் தூதுவர் காலிப் பூ தாஹருடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த சஜி;த் பிரேமதாச¸ இலங்கை அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள்¸ குவைத்தில் பணியாற்றிய நிலையில் இலங்கை…

மேலும்

பாடசாலை, பல்கலைக்கழக விண்ணப்பங்கள்.

2019 மற்றும் 2020ஆம் ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிகளுக்கான இணையம் மூலமான விண்ணப்ப இறுதி திகதி ஜூன் 2 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி ஏப்ரல் 9ஆக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும் கோரொனாவைரஸ் பரவல் காரணமாக அந்த திகதி பிற்போடப்பட்டது. இதேவேளை அரச பாடசாலைகளில் 2021ஆம் ஆண்டுக்காக…

மேலும்

அரிசி விலையில் மீள்திருத்தம்..!!

அரிசி வகைகளின் அதிகூடிய சில்லறை விலையில் மீள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் நாட்டரிசி கிலோ ஒன்று 96 ரூபா¸ சம்பா கிலோ ஒன்று 98 ரூபா¸ கீரி சம்பா கிலோ ஒன்று 125 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த தகவல்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ளது

மேலும்

பொதுத்தேர்தல்-நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான்..!!

பொதுத்தேர்தல்-நுவரெலியா மாவட்டத்தில் மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக அவருடைய மகன் ஜீவன் தொண்டமான் போட்டியிடுவார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று பொது ஜன பெரமுனாவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்

கொரோன தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது..!!

இலங்கையில் கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலையில் 12 கடற்படையினர் குணடைந்தநிலையில் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 732. நடப்பில் 577பேர் கொரோனவுக்காக வைத்;தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேலும்

7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!

மழை காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி¸ கேகாலை¸ கண்டி¸ நுவரெலிய¸காலி¸ களுத்துறை¸ மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை தற்போது முதல் நாளைவரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரியின் எலபாத்த¸ அயகம¸ கிரியெல்ல கொடக்கவெ¸ கஹவத்த¸ கொலொன்ன¸ எஹலியகொட¸ குருவிட்ட¸ கலவானை¸ ஓப்பநாயக்க¸ பலாங்கொடை¸…

மேலும்

நாட்டின் கொரோனாபரவல் தொடர்பில் எந்தவொரு தகவலும் மறைக்கப்படவில்லை..!!

நாட்டின் கொரோனாபரவல் தொடர்பில் எந்தவொரு தகவலும் மறைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொடர்பான தகவல்களை குறைத்துக்கூறுதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஏற்கமுடியாதவை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் தகவல்கள் யாவும் துல்லியமானவையாகும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. சுயாதீன நிபுணர்களின் கூட்டணி என்ற அமைப்பு¸ சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. அதில்…

மேலும்

கரும்புலி ஒன்று காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..!!

மஸ்கெலிய நல்லத்தண்ணியில் நேற்று கரும்புலி ஒன்று வலையில் சிக்கிய காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். லக்சபான நல்லத்தண்ணி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வலை ஒன்றில் சிக்கிய இந்த புலியின் வலதுகாலில் காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் இது தொடாபில் வாழைமலை என்ற இடத்தை சேர்ந்த 56 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனபரிபாலன திணைக்களத்தின் அதிகாரி ஒருவர்…

மேலும்

ஆறுமுகனின் உடலம் நோர்வூட்டில் தகனம் செய்யப்படும் ..!!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடலம் தற்போது கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பபட்டுள்ளது நூளை காலை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாலையில் ரம்பொட வௌண்டனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது இதனையடுத்து 30ஆம் திகதியன்று கொட்டக்கலை சீஎல்எப் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் எதிர்வரும் 31ஆம் திகதியன்று நோர்வூட் மைதானத்தில் தகனம் செய்யப்படு;ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்