வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புகிறது நேபாளம்..!!

இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதுப்பித்துள்ள வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய குறித்த வரைபடத்தை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்ரகாண்டில் உள்ள காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறிவந்த நேபாளம், அந்தப் பகுதிகளை உள்ளடக்கி, கடந்த மே மாதத்தில் நேபாள அரசு புதிய…

மேலும்

தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்தது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் மாத்திரம் 52 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து 4 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளதுடன், புதிதாக 758 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு 11 இலட்சத்து…

மேலும்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்வுக்கூறல்..!!

வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இது தொடர்பில் இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவித்தலில், “வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும்…

மேலும்

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்..!!

தமிழகத்தில் 7ஆவது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த சில…

மேலும்

இந்திய – சீன இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை…!!

கிழக்கு லடாக்கில் சீன படைகள் பின்வாங்கலை தாமதப்படுத்துவதால் இருநாடுகளுக்கு இடையேயான இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறி குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை பின்வாங்க இந்தியா – சீனா இடையே, தூதரக மற்றும் இராணுவ மட்டத்தில் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக கடந்த மாதம் 14ம் திகதி நடைபெற்ற பேச்சுவர்த்தையில்…

மேலும்

சர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை நீட்டிப்பு..!!

கொரோனா நெருக்கடி காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை வரும் ஓகஸ்ற் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 23ஆம் திகதி முதல் சர்வதேச விமானக் போக்குவரத்து சேவை மற்றும்…

மேலும்

மும்மொழிக் கொள்கை பற்றி தமிழக அரசு மௌத்தை கலைக்க வேண்டும்..!!

மும்மொழிக் கொள்கை பற்றி தமிழக அரசு உடனே மௌத்தினை கலைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும், சமூகநீதிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிராக இருப்பதாக கூறியுள்ளார். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் புதிய…

மேலும்

ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு தங்கம், எத்தனை மின் சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் இருந்தன..!!

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கமும் 601 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும்…

மேலும்

மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்பட இந்தியா, பிரித்தானியா..!!

மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்படும் நோக்கில் 77.10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியாவும்,  பிரித்தானியாவும் கையெழுத்திட்டுள்ளன. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் மேற்படி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பில் பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் கொமன்வெல்த் இணையமைச்சர் தெரிவிக்கையில், “…

மேலும்

நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை..!!

நாட்டின் முன்னணி வங்கித் தலைவா்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாட்டில் இப்போதைய பொருளாதார சூழ்நிலையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.…

மேலும்