ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்தில் பாராபட்சம் – தயாசிறி குற்றச்சாட்டு..!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்தில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் குறித்த கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் கூட்டணியாக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொடர்ந்தும் செயற்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேக குறிப்பிட்டுள்ளாhர்.

Related posts