அடிப்படைவாத கருத்துக்களை பரப்பிய இருவர் கைது..!!

அடிப்படைவாத கருத்துக்களை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் மட்டக்களப்பிலும், மற்றையவர் மாத்தளையிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய சந்தேக நபர் ஒருவரே மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் மாத்தளையில் கைது செய்யப்பட்டவர் அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

Related posts