2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் குறித்த விபரம்..!!

பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் நகுல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ரா, கனி உள்ளிட்ட ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் செல்வது குறித்து வீடியோ ஒன்றின் மூலம் ‘பாய்ஸ்’ நடிகர் நகுல் விளக்கமளித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். நிறைய பேர் நான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு போவதாக என்னிடம் போன் செய்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. அப்படியே தொடர்பு கொண்டு பேசினாலும் நான் என்னுடைய இந்த தங்கத்தை விட்டுட்டு எப்படி பிக்பாஸ் போவேன் என்று தனது மடியில் இருக்கும் குழந்தையைப் பார்த்து கூறுகிறார்.

நகுலின் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நகுல் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Related posts