ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 858பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 22ஆயிரத்து 268பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால், 69ஆயிரத்து 836பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 339பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 754பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts