தமிழகத்தின் சில பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என எச்சரிக்கை..!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 4 நாட்களுக்கு மழைப்பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைபெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தென் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுக் கூறியுள்ளது.

Related posts