அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்..!!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது கட்டமாக சினோபார்ம் தடுப்பூசியையும் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “சினோஃபார்ம் தடுப்பூசியை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் உள்ளூர் மக்கள் மீது அதைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு பதிவு செய்யப்படாத தடுப்பூசியை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், அரசாங்கம் தனது மக்களுக்கு சிறந்ததைச் செய்யும் எனவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts