அஸ்ட்ராசெனகா தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனளிக்கிறது – சீரம்..!!

அஸ்ட்ராசெனகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில் இது குறித்து தெரியவந்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது

அதேநேரம், கொரோனாவால் அதிக பாதிப்புக்கு  உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளிடம் அது 100 சதவிகித பலனை அளித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரம் இந்தியா நிறுவனம் இந்த தடுப்பூசியை கொவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்கிறது.

அத்தோடு, குறித்த தடுப்பூசியை பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts