அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன..!!

எதிர்க்கட்சி, தனது தந்திரோபத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கின்றதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ரெஜி ரணதுங்க நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கம் தேர்தல் சார்ந்த அரசாங்கம் அல்ல. நாங்கள் கொள்கை நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றோம்.

இதேவேளை காடழிப்பு என்பது இன்று சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய தலைப்பாகிவிட்டது.  நாங்கள் காடுகளை அழிக்க  ஆட்சிக்கு வரவில்லை.

வன வளங்களை பாதுகாக்க நாம் எப்போதும் உழைக்கிறோம். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பேரழிவுக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டி, நாட்டின் வாக்கெடுப்பை மாற்ற எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. அவர்களின் தந்திரோபாயம் அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பை  நடத்துவதாகும்.

வெளிநாடுகளில் காடழிப்பு புகைப்படங்களைப் பயன்படுத்தி, நாட்டில் காடழிப்பு நடைபெறுகிறது என்பதை சில சமூக ஊடகங்கள் காட்ட முயற்சிக்கின்றன. இவற்றால் ஏமாற வேண்டாம் என்று சொல்கிறேன்.

இந்த நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அரசாங்கம் எதனையும் செய்யாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts