அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்..!!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது கட்டமாக சினோபார்ம் தடுப்பூசியையும் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “சினோஃபார்ம் தடுப்பூசியை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும்…

மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன..!!

எதிர்க்கட்சி, தனது தந்திரோபத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கின்றதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ரெஜி ரணதுங்க நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கம் தேர்தல் சார்ந்த அரசாங்கம் அல்ல.…

மேலும்

2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் குறித்த விபரம்..!!

பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் நகுல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ரா, கனி உள்ளிட்ட ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக…

மேலும்

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை..!!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. குருந்தூர் மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குறித்த எழுத்துமூல அறிவிப்பில்  கோராப்பட்டுள்ளது. குறித்த…

மேலும்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,342பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து ஆயிரத்து 925பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 172பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு…

மேலும்

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் வரையில் உயிரிழப்பு..!!

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் கிங் சூப்பர் என்ற பல்பொருள் அங்காடியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. குறித்த பல்பொருள் அங்காடியில் நுழைந்த மர்ம நபரொருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு…

மேலும்

ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 858பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 22ஆயிரத்து 268பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ்…

மேலும்

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 18ம் திகதி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை…

மேலும்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனளிக்கிறது – சீரம்..!!

அஸ்ட்ராசெனகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில் இது குறித்து தெரியவந்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது அதேநேரம், கொரோனாவால் அதிக பாதிப்புக்கு  உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளிடம் அது 100 சதவிகித பலனை…

மேலும்

தமிழகத்தின் சில பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என எச்சரிக்கை..!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 4 நாட்களுக்கு மழைப்பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைபெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை எதிர்வரும் 25 மற்றும் 26…

மேலும்