மீண்டும் தொடங்கியது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது

மீண்டும் சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது திடீரென படப்பிடிப்பு குழுவினர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் மீதி உள்ள படப்பிடிப்பை விரைவில் முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிய நிலையில் தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இதே படத்திற்கான சண்டைக்காட்சி ஒன்றும் இதே ஸ்டுடியோவில் படமாக்கப்படவுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்து வரும் இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாள் நடைபெறும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு தீபாவளியன்று திட்டமிட்டபடி படக்குழுவினர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தீவிரமாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.,

Related posts