பாலிவுட் நடிகையின் அசர வைக்கும் வைரல் புகைப்படம்..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் “ஆர்ஆர்ஆர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்காக சீதா கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் தோன்றுகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு சீதா வேடத்தில் இவர் தோன்றிய காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ஆலியா பட் பிகினி போட்ட உடையுடன் நீச்சல் குளத்திற்கு அடியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பார்ப்பதற்கு இதில் கடற்கன்னியைப் போலவே காட்சி அளிக்கும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன் படு வித்தியாசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

மேலும் இவர், “ஆர்ஆர்ஆர்” படத்தை தவிர பாலிவுட்டில் முன்னணி இயக்குநராகக் கருதப்படும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் “கங்குபாய் கத்தியவாடி” படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் ஜுலை 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் முன்னணி நடிகர் ரன்பீருடன் இணைந்து “பிரம்மஸ்திரா“ எனும் படத்தின் படப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இப்படி பல பிரம்மாண்ட படங்களை கையில் வைத்து இருக்கும் நடிகை ஆலியா பட் பிகினி அணிந்து நீச்சல் குளத்திற்கு அடியில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இது படு வைரலாகி இருக்கிறது.

Related posts