
கமலஹாசன் நடித்த ’சகலகலா வல்லவன்’, ’காதல் பரிசு’ உட்பட பல படங்களிலும், ரஜினிகாந்த் நடித்த ’எங்கேயோ கேட்ட குரல்’ ’மாவீரன்’ உள்பட பல படங்களிலும், நடித்தவர் நடிகை அம்பிகா. கடந்த 80கள் மற்றும் 90களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இவர் ஒரு சில படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வரும் நிலையில் நடிகை அம்பிகாவும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக நடிகை அம்பிகா புகைப்படத்துடன் ஒரு பதிவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.