பிரான்ஸ் மற்றும் போலந்தில் மீண்டும் பகுதி அளவிலான முடக்கம்..!!

சமீபத்திய வாரங்களில்கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகள் மீண்டும் பகுதி அளவிலான முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

தலைநகர் பாரிஸ் உட்பட பிரான்ஸின் 16 பகுதிகளில் சுமார் 21 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள நிலையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை போலந்தில், அத்தியாவசியமற்ற கடைகள், ஹோட்டல்கள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிலையங்கள் என்பன மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நவம்பர் முதல் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் போலந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இருப்பினும் கொரோனா தொற்றின் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல், அவசரகால நிலை மற்றும் முடக்க கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டிய காலம் என கூறியுள்ளார்.

Related posts