பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டம் – பலர் கைது..!!

அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து முடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைட் பூங்காவிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் வரை இடமபெற்ற குறித்த பேரணியில் சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்தமையை விட அதிகமாக காணப்பட்டது என ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கொரோனா தொற்று தொடர்பான விதிகளின் கீழ் மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்வது சட்டவிரோதமானது என உள்துறை அமைச்சின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts