
பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சமீபகாலமாக வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இன்று இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை தந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், இதனையடுத்து மற்ற தொழிலாளர்கள் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.