தமிழகம்- புதுச்சேரியில் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது வேட்புமனுத் தாக்கல்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.

தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளுக்கும் எதிர்வரும் 6ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு 3 ஆயித்து 997 பேர், வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் 3ஆயிரத்து 332 பேர், ஆண்கள் என்பதுடன்  664 பேர், பெண்களாவர். மற்றும் ஒரு திருநங்கையும் உள்ளடங்குகிறார்.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts