குலுமணாலியில் லெஜண்ட் சரவணன்..!!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படப்பிடிப்பில் நாயகன் லெஜண்ட் சரவணன், நாயகி ஊர்வசி ரெளட்டாலா, விவேக் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். குலுமணாலியில் நடந்த படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

ஜெடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், அந்தோனி ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts