புலனாய்வு தகவல் கிடைத்தும் பென்டகன் தாக்குதலை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை – சிறிசேன..!!

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்தபோதும் அவர்களினால் பென்டகன் தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், முழு உலகமும் அடிப்படைவாதம் , தீவிரவாதம், இஸ்லாம் தீவிரவாதம் என்பவற்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

பாரிய வளமும் தொழில்நுட்பத்தில் பலம் பொருந்திய நாடுமான அமெரிக்காவிற்கு கூட செப்டெம்பர் 11 தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனது என மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பென்டகனிலுள்ள பாதுகாப்பு தலைமையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த பின்லேடனின் தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பின்லேடனின் தாக்குதல்கள் தொடர்பாகவும் அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு இரு வாரங்களுக்கு முன்னரே தகவல்கள் கிடைத்திருந்த போதும் அமெரிக்காவினால் அதனை தவிர்க்க முடியவில்லை என மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related posts