இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் மாற்று வழி – ஹேமந்த..!!

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இலங்கை பதிவு செய்திருந்த வகையில் தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டது.…

மேலும்

புலனாய்வு தகவல் கிடைத்தும் பென்டகன் தாக்குதலை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை – சிறிசேன..!!

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்தபோதும் அவர்களினால் பென்டகன் தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், முழு உலகமும் அடிப்படைவாதம் , தீவிரவாதம், இஸ்லாம் தீவிரவாதம் என்பவற்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். பாரிய வளமும் தொழில்நுட்பத்தில் பலம் பொருந்திய…

மேலும்

துரிதப் படுத்தப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தாக்குதலின் முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக அதன் விசாரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கண்டி சிறிமல்வத்தயில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். குண்டசாலை…

மேலும்

நாட்டின் பல இடங்களில் மழையுடனான காலநிலை..!!

மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையிலும்…

மேலும்

மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில் களனி ரஜ மஹா விகாரையில்.!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று ( திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் அமைப்பினால் இந்த ஆசீர்வாத பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

மேலும்

அரசாங்கம் பலவீனத்தை மறைத்துக்கொள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்துகிறது..!!

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் சிறந்த கொள்கை திட்டம் ஏதும் கிடையாது என்பதுடன்  தனது பலவீனத்தை மறைத்துக் கொள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர்…

மேலும்

இலங்கையில் 85 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிப்பு – 502 மரணங்களும் பதிவு..!!

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 290 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த…

மேலும்

உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று..!!

உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின்போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு…

மேலும்

IWOC விருதுக்கு தெரிவாகியுள்ள ரனிதா ஞானராஜா..!!

அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் உலகில் தைரியமிக்க பெண்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதுக்கு இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி இன்று முற்பகல் 10 மணியளவில் தொலைகாணொளி ஊடாக நடைபெறவுள்ளது. இதன்போது, அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட…

மேலும்

நாட்டில் கொரோனா மரணங்கள் 502 ஆக பதிவு..!!

நாட்டில் கொவிட்-19 காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது. மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பல்லேகல பகுதியை 74 வயதான ஆணொருவர் கண்டி தேசிய…

மேலும்