வெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..!!

மத்திய கிழக்கு மற்றும் சில நாடுகளுக்கு தேவையான வீட்டுப் பணிப்பெண்களை வழங்குவதற்காக, தலா 1 மில்லியன் ரூபாய் தரகு கட்டணத்தை முதலாளிகளிடம் இருந்து தரகர்கள் பெறுகின்றமை தொழிலாளர் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

அந்நிய செலாவணி தொடர்பான பணிக்குழுவின் அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அண்மையில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறியுள்ளதாவது, “வீட்டு பணிப்பெண் ஒருவருக்கு 1 மில்லியன் ரூபாய் தரகு பணத்தை முகவர்கள் பெறுகின்றனர்.

குறித்த முறையின் வாயிலாக தரகர்கள், அந்நிய செலாவணியில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை சம்பாதித்துள்ளனர். ஆனால் அந்த பணத்திற்கு என்ன நடந்தது  என்பது தொடர்பாக ஆராய வேண்டும்.

மேலும் உள்ளூர் வங்கிகள் ஊடாக  இலங்கைக்கு பணம் சட்டப்பூர்வமாக வருகிறதா என்பதை அறிய நிதி மற்றும் தொழில்நுட்ப தணிக்கை செய்ய வேண்டும்.

இதேவேளை ஒரு முகவர், மத்திய கிழக்கு மற்றும் சில நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களை வழங்குவதற்காக தலா 1 மில்லியன் ரூபாயை பெறுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒரு குரல் பதிவு கூட என்னிடம் இருக்கின்றது.

மேலும் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணை வழங்குவதற்காக முகவர்களுக்கு மத்திய கிழக்கு முதலாளிகள் செலுத்திய 10 இலட்சம் ரூபாயில், 500,000 ரூபாயை வீட்டு பணிப்பெண் பெயரில் வைப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட வேண்டும்.

முகவர்கள் பெறும் பணம் நாட்டிற்குள் வராதமையால் இந்த பணத்தை அந்நிய செலாவணியாக்குவது குறித்து ஆராய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts