இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உடன்  இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம் காட்டியுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோ தலைவர் கே.சிவன் மற்றும் இத்தாலி விண்வெளி கழக தலைவர் ஜியார்ஜியோ சகோசியா தலைமையிலான குழுக்கள் காணொலி வாயிலாக விண்வெளி திட்டத்தில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தின.

அப்போது புவிசார் ஆய்வு விண்வெளி அறிவியல் ‘ரோபோ’ மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது ஆகியவை தொடர்பாக கூடுதல் பணிக் குழுக்களை ஏற்படுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக  பிரேசில்,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இஸ்ரோவிடம் உள்ள விண்வெளி ஆய்வுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் தற்போது இத்தாலியும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts