இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உடன்  இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோ தலைவர் கே.சிவன் மற்றும் இத்தாலி விண்வெளி கழக தலைவர் ஜியார்ஜியோ சகோசியா தலைமையிலான குழுக்கள் காணொலி வாயிலாக விண்வெளி திட்டத்தில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தின. அப்போது புவிசார்…

மேலும்

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..!!

சிவராத்திரி நாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை வருடா வருடம் கடைப்பிடிக்கும் சிவ வாரம் இன்று (வெள்ளிக்கிழமை)  முதல்  எதிர்வரும் வியாழக்கிழமை வரை முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொண்டு பணிகளுக்கு சிவதொண்டர்களையும் சிவமங்கையர்களையும் இணைத்து கொள்ளும் வேலைத்திட்டம் முக்கியமாக இக்கால கட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு குருதிக்கொடை…

மேலும்

வெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..!!

மத்திய கிழக்கு மற்றும் சில நாடுகளுக்கு தேவையான வீட்டுப் பணிப்பெண்களை வழங்குவதற்காக, தலா 1 மில்லியன் ரூபாய் தரகு கட்டணத்தை முதலாளிகளிடம் இருந்து தரகர்கள் பெறுகின்றமை தொழிலாளர் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது. அந்நிய செலாவணி தொடர்பான பணிக்குழுவின் அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அண்மையில் கலந்துரையாடலில்…

மேலும்

வடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..!!

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், ‘ விவசாய…

மேலும்

கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு, கொட்டகலை நகரில் பிரதான வீதியை கடக்க முயற்சித்த நபரொருவர் மீது, லொறியொன்று மோதியுள்ள நிலையிலேயே, இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்தில் கொட்டகலை- வூட்டன் பகுதியைச் சேர்ந்த 78 வயதான ராமசாமி ராஜலிங்கம் என்பவரே…

மேலும்

கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா..!!

மியன்மார் இராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. பர்மாவின் இராணுவம் பொருளாதார ரீதியான பயன்களை அடையக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டங்களை இராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் இருதரப்பு யுத்தம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. மியன்மாரில் ஆட்சி அதிகாரத்தைக்…

மேலும்

இலங்கையில் இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்..!!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக BBC சிங்கள செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்தில், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  பிரமுகர்கள் என பலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பிரமுகர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையத்தில்…

மேலும்

1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி..?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் சம்பளம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாது என தொழில் அமைச்சு தரப்பு அறிவித்துள்ளது. அதேவேளை, சம்பள…

மேலும்