யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..!!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று(வியாழக்கிழமை) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்

Related posts