புதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..!!

விண்வெளி, அணுசக்தி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞா்களுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைத் திறம்படக் கையாள்வது குறித்து நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கு  இளைஞா்கள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமாகும். கல்வித்துறை சிறப்புடன் செயல்பட்டால் மட்டுமே அந்த நம்பிக்கை பிறக்கும்.

இளைஞா்கள் கல்வி கற்றலின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கற்கும் கல்வி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று மாணவா்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அதை அடிப்படையாகக் கொண்டே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிதிநிலை அறிக்கை வழிவகுக்கிறது. திறன் மேம்பாட்டுக்கு இதுவரை இல்லாத வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளூா் மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது. மற்ற உலக மொழிகளில் காணப்படும் சிறந்த தகவல்களை இந்திய மொழிகளுக்கு மொழிபெயா்க்க வேண்டியது கல்வியாளா்கள்,  நிபுணா்களின் பொறுப்பாகும்.

தற்போது தொழில்நுட்ப வசதிகள் வளா்ச்சி கண்டுள்ளதால்இ இந்த நடவடிக்கை சாத்தியமாகும். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மொழிபெயா்ப்புத் திட்டம் இதில் முக்கியப் பங்களிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts