எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..!!

நேபாளம்,  பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 13 ஆயிரம் வீரர்களை கொண்ட  12 பட்டாலியன்களை உருவாக்க  மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நேபாளம், பூடான் எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை  எஸ்.எஸ்.பி. எனப்படும் ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு கவனித்து வருகிறது.  இந்தப் படையில்90 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில், பூடான் மற்றும் திபெத் உடனான எல்லைப் பகுதியையும்  இந்தப் படைப் பிரிவு கண்காணித்து வருகிறது. இதன் தேவைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2019 ஆம் ஆண்டு ஆய்வு செய்து வந்தார்.

இதனையடுத்து ’12 பட்டாலியன்கள், ‘பிரான்டியர்’ எனப்படும் ஒரு படைப் பிரிவு தலைமைகம்,  ‘செக்டார்’ எனப்படும்  மூன்று துணை படைப் பிரிவு தலைமையகங்களை அமைக்க வேண்டும் என எஸ்.எஸ்.பி. அறிக்கை அளித்திருந்தது. இதற்கமைவாகவே மேற்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பட்டாலியின் என்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் கொண்டது. செக்டார் என்பது 56 பட்டாலியன்கள் கொண்டது. அதேபோல் பிரான்டியர் என்பது 24 செக்டாரை உள்ளடக்கியதாகும்.

Related posts