க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..!!

தற்போது நடைபெற்றுவரும் 2020 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, சிலாவத்த பரீட்சை நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மருதங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கெக்கிராவ பொலிஸ் பிரிவில் உள்ள பரீட்சை நிலையத்தில் 16 வயதான பரீட்சாத்தி ஒருவர் மூன்று மாணவர்களினால் தாக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்த மாணவர் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

Related posts