க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம் உட்பட இருவேறு சம்பவங்கள் பதிவு..!!

தற்போது நடைபெற்றுவரும் 2020 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, சிலாவத்த பரீட்சை நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹன…

மேலும்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. அதன்படி, மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார். பல கட்டங்களின் கீழ் ஒரு இலட்சத்து 35…

மேலும்

கொடிகாமம் பொதுச் சந்தை மூடப்பட்டது ..!!

கொடிகாமம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை அடுத்து குறித்த பொதுச் சந்தை இன்று (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் குறித்த வியாபாரியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் போராட்டம்..!!

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக பொத்துவில் முதல் பொதலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை…

மேலும்

இரணைதீவுக்குச் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு- மக்கள் மத்தியில் அமைதியின்மை..!!

இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மெசிடோ…

மேலும்

பல்கலைக்கு 10,588 மேலதிக மாணவர்கள்- பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து..!!

பல்கலைக்கழகங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பத்தாயிரத்து 588 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்றவாறே பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற,…

மேலும்