வடக்கு அயர்லாந்தில் ‘பாங்க் ஒஃப் அயர்லாந்து’ 15 கிளைகளை மூடுகிறது..!!

வடக்கு அயர்லாந்தில் 15 கிளை வங்கிகளை மூடுவதாக ‘பாங்க் ஒஃப் அயர்லாந்து’ அறிவித்துள்ளது.

இது தற்போது வடக்கு அயர்லாந்தில் செயற்பட்டு வரும் 28 கிளைகளில் பாதிக்கும் மேலானது ஆகும்.

இது ஒரு பரந்த செலவுக் குறைப்பின் ஒரு பகுதியாகும். இது அயர்லாந்து தீவு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கிளைகளை மூடும்.

டப்ளினில் உள்ள’பாங்க் ஒஃப் அயர்லாந்து’ அயர்லாந்து குடியரசு மற்றும் பிரித்தானியா முழுவதும் செயற்படுகிறது. அத்துடன் இது வடக்கு அயர்லாந்தில் பெரிய நான்கு வங்கிகளில் ஒன்றாகும்.

வங்கியின் பிரித்தானியா தலைமை அலுவலகமும் லண்டனில் இருந்து பெல்ஃபாஸ்டுக்கு இடம் பெயரும் என்று தலைமை நிர்வாகி பிரான்செஸ்கா மெக்டோனாக் தெரிவித்தார்.

Related posts