மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு அரசியல் துறையில் நுழைய விரும்பும் பொதுமக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு களமிறங்கும் புதிய வேட்பாளர்களை ஆதரிக்க கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மாகாண சபை தேர்தலில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட ஆர்வமாக உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கியுள்ளதாகவும் குறித்த விண்ணப்பப்படிவங்களை மார்ச் இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றதைப் போலவே, மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts