இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் முடிவு: வீரர்களின் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்..!!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

அவுஸ்ரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மார்னஸ் லபுஸ்சேகன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் தொடருகின்றனர்.

இங்கிலாந்தின் ஜோ ரூட் 853 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இந்தியாவின் விராட் கோஹ்லி 836 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 760 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், நியூஸிலாந்தின் ஹென்ரி நிக்கோல்ஸ் 747 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா, நடைபெற்று முடிந்த இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதையடுத்து 20 புள்ளிகள் பெற்று 742 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர் 724 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் புஜாரா இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு பத்தாவது இடத்தில் உள்ளார்.

இதேபோல பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியில், அவுஸ்ரேலியாவின் பெட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூஸிலாந்தின் நெய்ல் வாக்னர் 825 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் அஸ்வின் 823 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹசில்வுட் 816 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூஸிலாந்தின் டிம் சவுத்தீ 811 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து வீரர்களான ஜேம்ஸ் எண்டர்சன் 809 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கும்;, ஸ்டுவர்ட் ப்ரோட் 800 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவின் கார்கிஸோ ரபாடா 746 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் பும்ரா 746 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் மிட்செல் ஸ்டாக் 744 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

Related posts