மன்னாரில் நெல்லிற்கு உரிய நிர்ணய விலை இல்லை-விவசாயிகள் தொடர்ந்தும் பாதீப்பு..!!

இலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இது வரை நிர்ணயிக்கப்படாமையினால் அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து உலர்ந்த நிலையில் நெல்லை கொள்வனவு செய்வதினால் தொடர்ச்சியாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் பாரிய நஸ்டத்தை எதிர் நோக்குவதாக மன்னார் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கையின் நெல் நிரம்பல் சந்தையில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்தின்…

மேலும்

பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து இலங்கையை காப்பாற்றியது ஐ.நா..!!

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற ஈழத்தமிழர் முன்வைத்த பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து இலங்கையை காப்பாற்றியது ஐ.நா மனித உரிமைகள் பேரவை-என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “இலங்கையின்…

மேலும்

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏப்ரலில்..!!

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கையின் கொள்வனவு பாதிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து பத்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக,…

மேலும்

அடிப்படைவாத கருத்துக்களை பரப்பிய இருவர் கைது..!!

அடிப்படைவாத கருத்துக்களை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டக்களப்பிலும், மற்றையவர் மாத்தளையிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய சந்தேக நபர் ஒருவரே மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் மாத்தளையில் கைது செய்யப்பட்டவர் அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்…

மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்தில் பாராபட்சம் – தயாசிறி குற்றச்சாட்டு..!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்தில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் குறித்த கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு குற்றச்சாட்டுக்களை…

மேலும்

யாழில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, இராணுவமும் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்..!!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது. யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது…

மேலும்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்..!!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது கட்டமாக சினோபார்ம் தடுப்பூசியையும் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “சினோஃபார்ம் தடுப்பூசியை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும்…

மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன..!!

எதிர்க்கட்சி, தனது தந்திரோபத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கின்றதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ரெஜி ரணதுங்க நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கம் தேர்தல் சார்ந்த அரசாங்கம் அல்ல.…

மேலும்

2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் குறித்த விபரம்..!!

பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் நகுல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ரா, கனி உள்ளிட்ட ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக…

மேலும்

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை..!!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. குருந்தூர் மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குறித்த எழுத்துமூல அறிவிப்பில்  கோராப்பட்டுள்ளது. குறித்த…

மேலும்