நைஜீரியாவில் மாணவிகள் கடத்தல்..!!

நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள் பல மணி நேரம் இருந்த ஆயுதக் குழுவினர் அங்கிருந்த மாணவிகளை கடத்திச் சென்றனர்.பாடசாலை…

மேலும்

அச்சுறுத்தல் குறித்து பைடன்- சவுதி மன்னர் பேச்சு..!!

சவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தொலைபேசி வாயிலாக நேற்று (வெள்ளிக்கிழமை) இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும், சவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத…

மேலும்

94வது நாளாக விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் சாலையோரம் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இதேவேளை டெல்லி டிராக்டர் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட 152 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய…

மேலும்

தா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்..!!

மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 24ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள இல்லத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், வைக்கப்பட்ட…

மேலும்

சமக – ஐஜேகே இடையே புதிய தேர்தல் கூட்டணி..!!

சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதியானது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் மே 2ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே…

மேலும்

சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்..!!

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ளிட்ட பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக…

மேலும்

இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது..!!

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனித உரிமைகள்  கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுத்தம்…

மேலும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று..!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) முற்பகல் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஜெனிவா விவகாரம், புதிய அரசியலமைப்பு மற்றும் கட்சிசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இணைவது குறித்தும் இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும்

விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்..!!

கம்பஹா மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல், அவர்கள் குறித்த பணிகளில் இருந்து விலகுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி வழங்குவதற்கான மத்திய நிலையங்களின் எண்ணிக்கையை இன்று முதல் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே  இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக…

மேலும்

ஐரோப்பிய ஒன்றியம் கவலை..!!

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு கூறியுள்ளது. காணாமற் போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்ற நிறுவனங்களை பாதுகாப்பது, அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது…

மேலும்