ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்..!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு பதினெட்டு நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவானது, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். தகவல்களின்படி, இந்த 18 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களைக் கொண்ட…

மேலும்

அயர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் ஏப்ரல் 5ஆம் திகதி வரை நீடிப்பு..!!

அயர்லாந்தில் தற்போதைய நிலை-5 அல்லது நாட்டில் மிக உயர்ந்த கொவிட்-19 கட்டுப்பாடுகள், எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘குழந்தை பராமரிப்பு சேவைகள்,…

மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது. இந்த விழா, இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாளை வரை ஆறு அமர்வுகளாக பட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில், யாழ். பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமை தாங்கி பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், பல்கலைக்கழகத்…

மேலும்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இப்போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் களமிறங்கவுள்ளன. அத்துடன் மிக முக்கியமாக அதிக பார்வையாளர்கள் நேரில் இரசித்து…

மேலும்

ஏற்றம்- இறக்கம் நிறைந்த சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியலில் சம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் தொடர்ந்தும் 12,030 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்பெயினின் ரபேல்…

மேலும்

பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆயிரத்தைக் கடந்தது..!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 85ஆயிரத்து 44பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 36இலட்சத்து 29ஆயிரத்து 891பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ்…

மேலும்

தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்..!!

ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள…

மேலும்

மராட்டியம் மற்றும் கேரளாவில் புதிய வகை கொரோனா வைரஸ்..!!

மராட்டியம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறித்த மாநிலங்களில் என்440கே, 484கே ஆகிய 2 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ்களே காரணம் என நம்புவதற்கில்லை…

மேலும்

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 8,489பேர் பாதிப்பு- 548பேர் உயிரிழப்பு..!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 489பேர் பாதிக்கப்பட்டதோடு 548பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 41இலட்சத்து 34ஆயிரத்து 639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 305பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து ஆறாயிரத்து…

மேலும்

தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தாள் இன்று – சிறு தொகுப்பு!

தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்டவரும் தமிழ் திரையுலகின் சிம்ம சொற்பனமாகத் திகழ்ந்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியினர், தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெயலலிதாவை நினைவு கூருகின்றனர். ஜெயலலிதா பற்றிய முக்கிய விடயங்களின் தொகுப்பை பார்க்கலாம், 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம்…

மேலும்