மேலும் 530 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்..!!

வெளிநாடுகளில் இருந்து இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 11 விமானங்கள் மூலமாக 530 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த 95 பேரும் சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த 77 பேரும் கட்டாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 50 பேரும் கட்டாரிலிருந்து வருகை தந்த 46 பேரும் அடங்குவர்.

நாட்டை வந்தடைந்த அனைத்து பயணிகளும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

இதேவேளை குறித்த கட்டத்தில் 11 விமானங்களின் மூலமாக 878 பயணிகள் நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.

அவர்களின் இந்தியாவின் சென்னைக்கு 180 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாய்க்கு 122 பேரும் சென்றுள்ளனர்.

இதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 22 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக 1,408 பயணிகள் தமக்கான சேவைகளைப் பெற்றுள்ளனர்.

Related posts