தவறுகளை சரிசெய்து அதிகாரத்திற்கு திரும்பத் தயார் – ஐ.தே.க..!!

மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் கட்சி ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மாத்தறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, குறைபாடுகளை நிவர்த்தி செய்து கட்சியையும் நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியைப் பிளவுபடுத்த உழைத்தவர்கள் அரசியலில் வெற்றி பெறவில்லை என கூறினார்.

முன்னதாக கட்சியில் இருந்து விலகிய பல அனுபவமுள்ள அரசியல்வாதிகள் பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

Related posts