மேலும் 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!!

தொழில் வாய்ப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப முடியாது பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளான மேலும் 291 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திரும்பியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் விசேட திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன்படி இவர்கள் இன்று அதிகாலை 2.55 மணிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயிலிருந்து கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பபட்டனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts