மாகாபாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..!!

விஜய் டிவி ஆங்கரான மாகாபா ஆனந்த் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். எப்எம் ரேடியோவில் பல ஆண்டுகள் பணிபுரிந்து அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழ் திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண் சுசினா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாகாபா ஆனந்த் அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்த நிலையில் தற்போது அவர் தனது மகனின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் இருவரும் கால்பந்து விளையாட்டு போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றும், மாகாபாவின் தோளின் மீது அவரது மகன் கால் வைத்து உட்கார்ந்து இருப்பது போன்றும் வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளது

இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts