கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க G7 நாடுகள் ஒன்றிணைவு..!!

உலகளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க ஒன்றிணைவதாக G7 நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

G7 மாநாட்டின் பிரதான அமர்வின் நிறைவில் கூட்டாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இதற்காக 7.5 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்க இணங்கியுள்ளதாகவும் G7 நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்காக நீதியான முறையில் தடுப்பூசிகளை விநியோகித்தல், வல்லரசு நாடுகளின் தலையாய கடமையென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட 7.5 பில்லியன் டொலரில் 4 பில்லியன் டொலரை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

அதில் 2 பில்லியன் டொலரை இந்த வருடத்திலேயே வழங்குவதாகவும் மிகுதி 2 பில்லியன் தொகையை அடுத்த இரு வருடங்களில் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts