இந்தியாவில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று தொற்று பாதிப்பால் மேலும் 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,302 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மேலும் 11,667 பேர், குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,89,715 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 1,45,634 பேர், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் இதுவரை 1,10,85,173 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts