சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவும் – சுகாதார அமைச்சுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம்..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில்,  “இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்து…

மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுமார் ஆயிரத்து 500 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுமார் ஆயிரத்து 500 பேருக்கு இதுவரை கொவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர், விமானப்படை, காவல்துறை, குற்றப் புலனாய்வுத்துறை, குடிவரவு மற்றும் குடியகல்வு துறையினர், சுங்கப் பிரிவினர், துப்புரவாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக மாலில் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த…

மேலும்

கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க G7 நாடுகள் ஒன்றிணைவு..!!

உலகளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க ஒன்றிணைவதாக G7 நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். G7 மாநாட்டின் பிரதான அமர்வின் நிறைவில் கூட்டாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதற்காக 7.5 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்க இணங்கியுள்ளதாகவும் G7 நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்காக நீதியான முறையில் தடுப்பூசிகளை விநியோகித்தல், வல்லரசு நாடுகளின்…

மேலும்

14 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த உறுதிபூண்டிருந்தனர்: சஹ்ரானிடம் பயிற்சிப் பெற்ற பெண் வாக்குமூலம்..!!

14 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த உறுதிபூண்டிருந்ததாக ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி தகவல் வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் வழங்கிய வாக்குமூலத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்…

மேலும்

காவிரி- குண்டாறு இணைப்புத்திட்டம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்..!!

காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உட்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி  ஆரம்பித்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்- விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

மேலும்

மக்களிடம் அச்சத்தை போக்க தடுப்பூசி போட்டுக்கொண்ட அவுஸ்ரேலிய பிரதமர்..!!

அவுஸ்ரேலியாவில் நாளை(திங்கட்கிழமை) முதல் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன்னோட்டமாகவும்,…

மேலும்

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது: நாராயணசாமி அவசர ஆலோசனை கூட்டம்..!!

பெரும்பான்மையை நாளை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். புதுச்சேரியில் தி.மு.க.ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இதற்கிடையே அடுத்தடுத்து காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்தனர். இதனால் சட்டபேரவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி (சபாநாயகர் உள்பட)…

மேலும்

இந்தியாவில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று தொற்று பாதிப்பால் மேலும் 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,302 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மேலும் 11,667 பேர்,…

மேலும்

ஐ.நா. கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – 23ஆம் திகதி இலங்கை குறித்து விவாதம்..!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில்   ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த நிலையில், 23 ஆம் திகதி மாலை வேளையில் அல்லது 24ஆம் திகதி காலையில் இலங்கை சார்பில் …

மேலும்

மேலும் 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!!

தொழில் வாய்ப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப முடியாது பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளான மேலும் 291 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திரும்பியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் விசேட திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்படி இவர்கள் இன்று அதிகாலை 2.55 மணிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயிலிருந்து கட்டுநாயக்க, சர்வதேச…

மேலும்