பரகுவேயில் கொவிட்-19 தொற்றினால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

பரகுவேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பரகுவேயில் மொத்தமாக மூவாயிரத்து 8பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 73ஆவது நாடாக விளங்கும் பரகுவேயில் இதுவரை ஒரு இலட்சத்து 48ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்நத 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 369பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 21ஆயிரத்து 509பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 240பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 24ஆயிரத்து 105பேர் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts