குட்டி உணவகத்துக்கு கணவருடன் விசிட் அடித்த பிரபல நடிகை… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபரில் தொழில் அதிபர் கவுதம் கிச்லுவை கரம் பிடித்தார். இதைத் தொடர்ந்து தேனிலவு சென்ற இந்த ஜோடி விதவிதமான போட்டோ ஷுட்டை நடத்தி சமூக வலைத்தளத்தையே அலற விட்டனர். இவர்கள் மாலத் தீவில் எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படம் படு வைரலானதைத் தொடர்ந்து சிலர் மாலத்தீவுக்கு படையெடுக்கவும் செய்தனர்.

இந்நிலையில் நடிகை காஜல் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஒரு சிறிய உணவகத்தில் அமர்ந்து கணவரோடு உணவருந்துவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது படு வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்து உள்ள அவர், “சாந்தி மெஸ்ஸில் சாந்தி அக்காவும் பாலகுமார் அண்ணனும் உணவோடு சேர்த்து அன்பையும் மிக அதிகமாக பரிமாறினார்கள். அதனால்தான் இந்த மெஸ் 27 ஆண்டுகளாக இங்கு உணவு சுவையாக இருக்கிறது. நான் இந்த சிறிய உணவகத்துக்கு 9 வருடங்களாக வந்து செல்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

காஜலின் இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தனை பெரிய பிரபலம் ஒரு சிறிய உணவகத்தில் உணவு அருந்துவார்களா? எனக் கேள்வியும் எழுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்த லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ் சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2“ படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts