இவர்தான் சனம்ஷெட்டியின் புதிய காதலரா? வைரல் புகைப்படம்..!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி தனது மனதுக்கு தோன்றியதை தைரியமாக பேசியவர் என்பதும் யாருடைய ஆதரவாளராகவும் இல்லாமல் எந்த குரூப்பிலும் இல்லாமல் அனைவரிடமும் சம அளவில் பழகி வந்தார் என்பதும் இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் சனம்ஷெட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 போட்டியாளர் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி காதலில் இருந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திடீரென இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதை அடுத்து தர்ஷன் மீது காவல்துறையில் சனம் புகார் அளித்திருந்தார் என்பதும், இதுகுறித்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது காதலர் தினத்தில் சனம் ஷெட்டி தனது புதிய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தனது கையை காதலர் பிடித்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் ’இந்த நாளை மறக்க முடியாத நாளாக ஆக்கிய அவருக்கு நன்றி என்றும் காதலர் தினத்தில் அவருடன் டின்னர் சாப்பிட்டது ஒரு மேஜிக்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்

இந்த புகைப்படம் சனம் ஷெட்டியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்தான் சனம் ஷெட்டியின் புதிய காதலர் என்பது தெரிய வருகிறது. மேலும் சனம்ஷெட்டியின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான அனிதா சம்பத்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று தற்போது வைரலாகி வருகிறது

Related posts