மாளவிகா மோகனன் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: த்ரில் டீசரும் வெளியீடு..!!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவரது பாலிவுட் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டீசர் வீடியோவை வெளியிட்டு இந்த படத்தின் டைட்டில் ’யுத்ரா’ என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்

சித்தார்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ரவி உதயவார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசரில் அட்டகாசமான த்ரில் காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Related posts