சூர்யா 40: 12 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்..!!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ’சூர்யா 40’ படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஏற்கனவே சூர்யாவுடன் ’ஆதவன்’ ’சில்லுனு ஒரு காதல்’ ’ப்ரெண்ட்ஸ்’ ’ஆறு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின் அதாவது 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக திரையுலகில் அதிக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மேலும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்படும் என்றும் இந்த ஆண்டிற்குள் இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார் என்பது தெரிந்ததே

Related posts