நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் : எல்லைகள் மூடப்பட்டதால் போக்குவரத்தில் மாற்றம்..!!

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன்,  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்று  (திங்கட்கிழமை) 82வது நாளாக நீடிக்கிறது. எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் விவசாயிகள் போராடி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

மேலும்

பாடசாலைக்கு முதல்நாள் சென்ற மாணவன் உயிரிழப்பு..!!

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற  இந்த விபத்தில் பதுளை- அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் இணைவதற்காக அவருடைய பாட்டி மற்றும்…

மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி..!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். அதன்படி இராணுவ வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுவுள்ளன. இதேவேளை, மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய…

மேலும்

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது: கமல்ஹாசன்..!!

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியா முழுவதும் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ரூ.90க்கு மேலும், வட மாநிலங்களில் ரூ.100ஐயும் தாண்டி பெட்ரோல் விலை விற்பனையாகி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல்…

மேலும்

சூர்யா 40: 12 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்..!!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ’சூர்யா 40’ படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஏற்கனவே சூர்யாவுடன் ’ஆதவன்’ ’சில்லுனு…

மேலும்

மாளவிகா மோகனன் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: த்ரில் டீசரும் வெளியீடு..!!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவரது பாலிவுட் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வீடியோ…

மேலும்

கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப இடம் குறித்த தகவலை சீனா வெளியிட வேண்டும் – பிரித்தானியா..!!

கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப இடம் குறித்த தகவலை சீனா வெளியிட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்காவும் இந்த கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப், இந்த விடயத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு, சீனாவின் வூஹான் நகருக்குச் சென்று தொற்று தொடர்பாக…

மேலும்

மகாராஷ்டிரா லொறி விபத்தில் 10இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் பப்பாளி பழங்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  16 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த லொறி கிங்காவோன் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது லொறியில் பயணித்த 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அபோடா, கெர்ஹலா மற்றும்…

மேலும்

முஸ்லீம்களின் அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை எவ்வாறு நம்புவது- அஹமட் புர்க்கான்..!!

முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடக்கு- கிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அஹமட் புர்க்கான்…

மேலும்

யாழில் மாணவர்கள் சிலர் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!!

யாழ்ப்பாணம்- வலிகாமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்  முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது. வலிகாம பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும்…

மேலும்