பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதி!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சம்பளக்கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts